வாழ்க தமிழர் !வளர்க தமிழ் மக்கள்!

0
12

என் உயிரிலும் மேலான !!
கழக உடன்பிறப்புகளே!!
என் விழிகளின் இளமையாய்
இருந்த என் தமிழ் தோழர்களே !!
நான் இல்லாத தமிழக தேர்தலில் !
என் புதல்வனை !!
நான் மிகுந்த நம்பிக்கையோடு தான்,
உங்களிடம் ஒப்படைத்து மறந்தேன்!!
வெற்றிபெற செய்த மையில் என் உயிர் தோழர்கள்!!
பணத்திற்காகவோ!!
மிரட்டலுக்காகவோ! மாறவில்லை !
மாறப் போவதுமில்லை!!
மாற்றம் காண மடமைகலைய!
தமிழ் எழுச்சி தோற்றம் காண!!
மனம் மாறி! வாக்களித்த
பிற கட்சி தொண்டர்களுக்கும்!!
என் மனமார்ந்த நன்றிகள்!!
அறிவால் ஆற்றல் மிகுதியால்!
ஜனாதனத்தை எதிர்த்து!!
குரல்கொடுக்கும் தம்பி !திருமாவளவன்!!
அறிஞர் அண்ணா கொள்கையும்!
பெரியாரின் கருத்தியல் தோழமையும்!!
கொண்ட என் தோழர் வைகோவின் ஆதரவோடும்!
தோழமைக் கட்சிகள் கூடுதல் பலத்தோடும்!!
அரியணை ஏற வைத்த என் அன்பார்ந்த!
வாக்களித்த !
நல் உள்ளங்களுக்கும்!!
பணமழை!பதவி மழை! !
நனைவிலும்! கட்சி மாறுதலை
தொழில் வியாபார லாபம் மாறுதலாக!
படிக்காத !
பாமர மக்களை பணம் காட்டி
பணம் சம்பாதித்த!! பல சுயநலவாதிகள்!
பலர் நடுவிலும்!
தன் குணம் மாறா! தன் நாட்டு
மக்களை காக்கும் கொள்கை மாறா !
பல பொதுநல வாதிகளின் ஆதரவோடும் !!
தன் சுய மூளையில் சிந்தித்து வாக்களித்த!
படித்த! படிக்காத பாமர இளைஞர்களுக்கும்!!
என் கரம் கூப்பிய!
கற்பனை நன்றிகள்!! வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழர் !வளர்க தமிழ் மக்கள்!
என்றும் மேன்மேலும் மேன்மையாக என் வாழ்த்துக்கள்!

-இப்படிக்கு
கற்பனை கலைஞர்
கருணாநிதி!!
(கவிதை மாணிக்கம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here