எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடவேண்டும் என்று ஆளாளுக்கு தொண்டை கிழிய ஒலிபெருக்கியில் கொதித்தெழும் கூப்பாடுகள் இன்னும் இரண்டு நாட்களில் அடங்கிவிடும்.
தான் எளிமையானவன் என்று காட்டிக் கொள்ளத்தான் எத்தனை நடிக்க வேண்டியதிருக்கிறது இந்த அரசியல்வாதிகளுக்கு.
தெருவோரக் கடைகளில் எல்லாக் கட்சித் தலைவர்களும் டீ குடிச்சாச்சு.அதுலயும் ஒரு சிலர் டீ ஆத்துனாய்ங்க.
துணி துவைக்க, ஐயர்ன் பண்ண, தோசை சுட, இளநீ வெட்ட யென சகலகலா வல்லவர்களாகவும் ,மிகவும் எளிமையானவர்களாகவும் காட்டிக்கொண்ட அவர்கள், மக்களோடு மக்களாக இப்படி இணைந்து இருப்பது தேர்தல் சமயங்களில் மட்டும்தான்.
அதன்பின் அவர்களைக் காணுதலென்பது சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்பதுதான் எழுதப்படாதச் சட்டம்.
வசதி படைத்த வேட்பாளர், ஏழை வாக்காளனின் முன் கைகூப்பி வேண்டுவதெல்லாம் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக மட்டும்தான். அவர்களின் தாராள நடிப்புகளை பகிரங்கமாக படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் ஒளிபரப்பாகும் போதெல்லாம் துளியளவும் பெருமை கொள்ள முடிவதில்லை..நக்கல் சிரிப்போடு அடுத்தச் சேனலுக்கு தாவினால் அங்கொரு கட்சிக்காரருக்கு ஆரத்தி பூஜை நடந்துகொண்டு இருக்கும்..
அரசியல்வாதிங்க ஏமாத்துறாங்கன்னு மக்களுக்குத் தெரியும்.மக்கள் நம்மளை நம்பலேனு அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.ஆனாலும் பிடிச்சவன் பிடிக்காதவனோட சேர்ந்து கொண்டாடுற திருவிழா மாதிரி ஆளாளுக்கு பிஸியாக இருந்துக்க வேண்டியதுதான்.
காசுக்கோ ஓசிக்கோ ஆள்காட்டி விரலில் மறக்காக மை வச்சி சமுதாயக் கடமையாற்றுவது நம்ம கடமை. நமக்கு,நம்ம உழைச்சாத்தான் சோறு.
அப்படினு அரசியலை ஒதுக்க முடியாதுல.
ஏப்ரல் 6 அன்று ,வெறும் விடுமுறை நாளாக மட்டும் நினைத்து விடாமல்,
ஓஹோனு இல்லைனாலும் ஓரளவாவது ,இவங்க ஆட்சியில நல்லது நடக்கும்னு நம்பிக்கை வச்சிருப்போம் எந்தக் கட்சியின் மீதாவது இல்லையா? .
அப்போ சரி, மறக்காம ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில்
நாம ,நமக்கு விருப்பமானவங்களுக்கு வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவோமே..
#கனகா பாலன்