வளரும் குழந்தைகளுக்கு உதவும் பேரிக்காய் நன்மைகள் .

0
101

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பேரிக்காய்

தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. எனவே இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

காய்ச்சல் இருக்கும் போது, பேரிக்காயை உட்கொண்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள், பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால் குடல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை பேரிக்காய்க்கு அதிகம் உண்டு. எனவே உணவில் பேரிக்காயைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

நாள்பட்ட மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் இருப்பவர்கள், பேரிக்காயை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், மூட்டு வீக்கம் குறையும்.

பேரிக்காயில் காப்பர் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் பேரிக்காயை உட்கொண்டு வந்தால், சூரியனின் புறஊதாக்கதிர்களால் செல்கள் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

உடல் மிகவும் சோர்வுடன் அல்லது ஆற்றல் இல்லாதது போல் உணரும் போது, பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள குளுக்கோஸ், உடலுக்கு ஆற்றலைத் தரும்.குழந்தைகளுக்கு பேரிக்காய் சாப்பிடக்கொடுத்து பழகுவோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here