வரலாற்றில் இன்று – ஆகஸ்ட் 02 திருப்பதி லட்டுக்கு வயது-“305”

1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

துவக்கத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது 1803 முதல் லட்டு வடிவில் விலைக்கு விற்கும் நடைமுறை அமலானது. அப்போது அதன் விலை காலணா மட்டுமே.

ஓம் நமோ வேங்கடேசாய !