வனிதா விஜயகுமார் 3வது திருமணம், இயக்குனர் பீட்டரை கரம் பிடித்தார்.

0
53

நட்சத்திர குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பங்களில் ஒன்று விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் குடும்பமும் ஒன்று.

இதில் விஜயகுமாரின் மகள் வனிதா சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.அதன் பின்னர் ஒருசில படங்களில் மட்டும் நடித்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்றார்.
இந்த நிலையில் அவ்வப்போது அவர் சமையல் நிகழ்ச்சி உள்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று கொண்டிருக்கிறார். இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதாவிற்கு இன்று மூன்றாவது திருமணம் நடந்தது . வனிதா இதுவரை 2 திருமணங்கள் செய்துள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்து சில ஆண்டுகளில் 2வது திருமணம் செய்தார். முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் பீட்டர் பால் என்பரை 3வது திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு இவரின் மகள்களும் ஆதரவு கொடுத்தனர்.அதன்படி இவர்களது திருமணம் இன்று (ஜுன் 27) வனிதாவின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக நடந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு தானே மேக்கப் போடுவதை விவரித்து யூடியூப் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட வனிதாவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here