வசிகரமாய் ஒருகவிதை…

0
75

வசிகரமாய் ஒருகவிதை

என்இளமை தீருமுன்னே!
என்னவனே! வாராயோ!!

என் தேகம் மார்கழி பனியாட்டம்!!
என்மோகம்சித்திரைவெயிலாட்டம்!!
தீமூட்டி விட்டதாடா! உன்உருவம்!!
தீப்பொறி பறக்க!! முத்தம்கேட்குதடா என் பருவம்!!

பனங்கூந்தல் காயாட்டம்!
பருகாதமாங்கனிகள் ஆட்டம்!!
பருவத்து சிட்டென்னை!! கண்டவர் நெஞ்சம்
பருகிடமோக தீ மூட்டும்!!

குளிர் காயுவோம்
என்னவனே!!
குளிர்ந்த நீராடி!! காயுமுன்னே!
ஒட்டிக்கொள்ளும் பனிக்கட்டி கள் இரண்டும்!!
ஒரு சிறு !அணு, காற்றுபுகமுடியா! தேகம் இரண்டும்!!

தேவை என்றுசொல்லிடவே!!
தேடிஅலைபாயுதே!
இதழ்கள் இரண்டும் மல்லி டவே!!

இளம்நிலா காயும்முன்னே!!
இந்த இரவு தீருமுன்னே!!
கட்டுடல் கட்டிலிட!! தவிக்குதடா!!
கல்லுண்ட போதைஏறிட
கண்களால் கைதுசெய்த! உன்னை மட்டும்தேடுதடா!!

என்இளமைகாமம், செந்தட்டி இலைதேய்த்தே!!
என் தேகம் நின்பால்அரிப்பாய் ஊறுதே!!
மருந்தெனவே உன்தேகம்ஆகுமே!
மறுத்தேனும் சொல்லிடாதே! மறுகணமே,!

விரைந்து வா! விரையமாக்காதே!
மணமாலைசூடனுமா மறுபொழுது‌ வேண்டாம்!!
மனம் ஒருமிக்க !மயில் சம்மதிக்க! மறுநொடியே
பரிமாறி பருகிடவேண்டும்!! புதுமண தம்பதிகளாய்!!

-முத்துமணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here