மொச்சைக் கொட்டை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்…

0
51

மொச்சை கொட்டை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதனை லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்று அழைப்பார்கள். வெண்ணை போல் வழ வழப்பாக இருக்கும் அதன் தோற்றத்தால் பட்டர் பீன்ஸ் அன்று அழைக்கப்படுகிறது. மொச்சைக் கொட்டைக் கொண்டு பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

அவரைக்காய் போன்ற உருவம் கொண்ட இதன் தோல் பகுதி 3 இன்ச் நீளம் கொண்டது. இந்த தோலை உரித்தால் அதற்குள் இருக்கும் கொட்டை மொச்சையாகும். ஒரு நெற்றில் இரண்டு முதல் நான்கு கொட்டைகள் சிறுநீரக வடிவத்தில் இருக்கும். இதுவே மொச்சைக் கொட்டையாகும். பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. அன்டி ஆக்சிடென்ட், தாவர ஸ்டீரால் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ஊட்டச்சத்து..

100 கிராம் பச்சை மொச்சையில் கீழே குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்துகள் உள்ளன.

தண்ணீர் – 10.17கிராம் ஆற்றல் – 338Kcal
புரதம் – 21.46 கிராம்
கொழுப்பு – 0.69 கிராம்
கார்போ – 63.38 கிராம்
நார்ச்சத்து – 19.0 கிராம்
சர்க்கரை – 8.50 கிராம் கால்சியம் – 81 மிகி
இரும்புசத்து – 7.51 மிகி
மெக்னீசியம் – 224 மிகி
பாஸ்பரஸ் – 385 மிகி
பொட்டாசியம் – 1724 மிகி
சோடியம் – 18 மிகி
ஜின்க் – 2.83 மிகி
தைமின் – 0.507 மிகி
ரிபோப்லேவின் – 0.202 மிகி
நியாசின் – 1.537 மிகி
வைடமின் பி 6 – 0.512 மிகி
போலேட் – 395 mcg
வைட்டமின் ஈ – 0.72 மிகி
வைட்டமின் கே – 6.0 mcg

மலச்சிக்கலைத் தடுக்க..

மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து , சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கரையாத நார்ச்சத்துகள் இழைம வடிவத்தில் இருப்பதால் எளிய முறையில் உணவு செரிமான மண்டலம் வழியாக செல்ல உதவுகிறது மற்றும் மலத்தின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் மலம் கழிப்பதில் வேறு சில தொந்தரவுகள் இருப்பவர்கள், மொச்சைக் கொட்டை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

திசுக்களை ரிப்பேர் செய்ய..

மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கட்டுப்படுத்த புரதம் மிகவும் அவசியம். புரதம் என்பது உடலில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் சேதம் ஏற்பட்டால் பழுது பார்க்கவும் தேவையான கட்டுறுப்பாகும் . காயம் அல்லது உடல் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து விரைந்து மீண்டு வருவது , உடலில் புரத அளவை மேம்படுத்துவதால் சாத்தியமாகும்.

இதய ஆரோக்கியம்..

மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன. இவை எல்லா ஊட்டச்சத்துகளும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க விடாமல் நார்ச்சத்து உதவுகிறது, இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. தமனிகளின் சுவர்கள் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க போலேட் உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.

புற்றுநோயைத் தடுக்க..

மொச்சைக் கொட்டையில் உள்ள நார்சத்து, குடலில் நச்சுப் போருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியைத் தடுக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்று நோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கும் முகவராகவும் பணியாற்றுகிறது. மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவு ஜெனிச்டின் மற்றும் டைட்சின் என்னும் ஐஸோஃப்ளவன்களைக் கொண்டுள்ளது. இந்த கூறுகள் மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக அறியப்படுகிறது. கூடுதலாக, மொச்சைக் கொட்டையில் இருந்து எடுக்கப்படும் லூனாடுசின் என்னும் ட்ரிப்சின் – நிலையான நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடு, மார்பக புற்று நோய் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.

இரத்த சர்க்கரை அளவு..

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உயர் நார்ச்சத்து கொண்ட மொச்சை கொட்டை நல்ல தீர்வு தருகிறது. நீரிழிவு நோயாளின் இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்க அவர்கள் மொச்சைக் கொட்டையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் க்ளைகமிக் குறியீடு குறைவாக இருப்பதன் காரணத்தால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.

கர்ப்பம் தொடர்பான பிரச்சனை..

காய்ந்த மொச்சையும் பச்சை மொச்சையும் போலேட் சத்தின் மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது. கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு போலேட் சத்து மிகவும் அவசியம். கர்ப்ப காலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் போலேட் சத்து அதிகம் எடுத்துக் கொள்வதால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் நரம்பு தொடர்பான பாதிப்புகள் மற்றும் முதுகுத் தண்டு பாதிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here