தேவையானப் பொருட்கள் :
முருங்கைக்காய் – 8
வெங்காயம் – 4
தக்காளி – 3
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூ ன்
வேர்க்கடலை – 1 டீஸ்பூ ன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பத ன்
பச்சைமிளகாய் – 4
துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூ ன்
பட்டை – 1
கிராம்பு – 3
ஏலக்காய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் முருங்கைகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வேர்க்கடலையை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காயை, கொதிக்கும் நீரில் போட்டு வெந்த பிறகு ஆறவைத்து அதன் உள்சதையை எடுத்து வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூ டானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும், அதனுடன் சீரகம், வெங்காயம், இஞ்சி-பு ண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி, தொக்கு போல வந்த பின் தண்ணீர் சேர்த்து, கொதித்து வரும்போது பொடித்த வேர்க்கடலை, முருங்கைக்காய் சதை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, கரம் மசாலா போட்டு, கொதி வந்த பின் துருவிய தேங்காய் சேர்த்து, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கினால், ருசியான முருங்கைக்காய் கிரேவி தயார்!!