மும்மொழிக் கொள்கையை ஏற்கப் போவதில்லை எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை முன்னாள் கல்வித்துறை அமைச்சர் – தங்கம் தென்னரசு

0
148

மும்மொழிக் கொள்கையை ஏற்கப் போவதில்லை எனத் தமிழ்நாடு முதலமைச்சர் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.நல்லது. வரவேற்கின்றாம், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் – தங்கம் தென்னரசு

ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இழுத்து மூடப்போகின்றோம் எனப் பட்டவர்த்தனமாகப் புதிய கல்விக் கொள்கையில் சொல்லிவிட்டார்களே.

அதற்குப் பிறகும் அதைப் பற்றி முதலமைச்சரோ அவரது அமைச்சரவை சகாக்களோ வாயே திறக்கவில்லையே? ஏன்?

அதைக்கூட குழுப்போட்டு ஆராய்ந்துதான் எதிர்ப்பதா இல்லையா என முடிவு செய்யப் போகின்றார்களா?

தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்புக்களில் கூட ‘ செம்மொழி’ என்ற சொல் வந்துவிடாமல் படு கவனமாக இருக்கும் இந்த ஆட்சியாளர்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் குறித்து ஏதும் கவலை கொள்ளப் போவதில்லை.

ஆனால், மானமுள்ள தமிழருக்கு அந்தக் கவலையும்,கோபமும் நிரம்ப இருக்கத்தான் செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here