முத்தமிழ்…

0
33

தன் மூச்சே தமிழென வாழ்ந்த
முத்தமிழ் வித்தகரே
தாய்மொழிக்கு செம்மொழி எனும்
சிம்மாசனம் கொடுத்தவரே…
உந்தன் கவிதைகள்
யாப்பின்றி போனாலும்
மொழிகளின் காப்பின்றி போனதில்லை..

மாணவநேசன் மாத இதழின் முதல்வனே
தன் கவித்துவத்தை
உயிர்ப்போடு வைத்திருப்பவரே
தமிழுக்கு வேராய் இருந்தத் தலைவரே…

காலத்தை வென்ற கலைஞரே
பார்போற்றும் படைப்பாளியே
தமிழிசை காவலரே
தன்னிகரற்றத் தலைவரே
மொத்தத்தில்
இளைஞர்களின் இதயம் தொட்ட
இளஞ்சூரியனே…
நின் புகழ் வாழிய வாழியவே…

சசிகலா திருமால்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here