விடியலும் இல்லை!!
அடையலும் இல்லை!!
விலைபெறாது! விலையும்
போகாது!!
வாழ்க்கையை ரசிக்காது!!
வாழவே! முடியாது,,!!
வாழத்தான் ஆசைஇருக்கு!!
ஆனாலும்,வறுமைபடக்கூடாது!!
வசதிவாழ்க்கை
வேண்டும்!!
வடுபடாத உழைப்பு வேண்டும்!!
கைநனையாது,உண்ணவேண்டும்!!
கால் பயணிக்காது பயணம்முடிய வேண்டும்!!
இப்படி எண்ணமெல்லாம் ஏக்கமாய்,போக!
இல்லறவாழ்வோ!! கனவாகிபோக,,!!
செடியில் பூத்த மலர் செழுமையாய்
இளமையாய் உதிராமல்
எத்தனைகாலங்கள் இருக்கும்!!
உதிராமலே செடிலியிலே
பூத்தாலும் வாடத்தானே செய்யும்!!
நித்தம் நினைவால் வாடும்
முதிர்கன்னி!
-முத்துமாணிக்கம்,சங்குப்பட்டி .