முதலாளி

0
15

உச்சி கணக்குது
உடம்பெல்லாம் நோவுது””ன்னு
சொல்லிவிட்டு
பிச்சு ஊத்துற மழையில்
பொறப்பட்ட தெங்கேன்னேன்
பொஞ்சாதி கிட்ட

ஒழைக்க முடியலனு
நீ
உட்கார்ந்த பின்னால
பசி தீர்க்க வேணுமின்னு
வயோதிகத் தம்பதிக்கு
வடிச்சுப் போட சம்மதித்து
வருசம் மூணாச்சு
என்னைய
எதிர்பார்த்துப் பாவம்
பசியோட இருப்பாங்க
ஒரெட்டு போயி ஓடியாரேன்னு
சொன்னவளே!
எஞ்சிய சோத்த
எடுத்து வருவாயினு
இரைப்பைக்குச் சொல்லி வச்சேன்னேன்.

அவ
அவசரமாய் கலயம் வச்சு
அரிசி போட்டாள்

தரையீரம் ஆகுமின்னு
தடுத்து
கொள்ளைப் பக்கம்
வரச் சொன்னாங்க
என்ன மழையின்னாலும்
எரிச்சுக் குடுக்க வா””ன்னாக உடம்புக்கு
நோவுச்சுன்னா கசாயம் குடி”ன்னாக
முதலாளி தானே வேறென்ன?னு
முனுமுனுத்து கிட்டே
சோறு வடிச்சா.

 -சிவபுரி சு.சுசிலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here