முட்டையை ஒன்றன் மீது ஒன்றாக 3 முட்டைகளை அடுக்கி இளைஞர் ஒருவர் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.
மலேசியா கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற இளைஞர் ஒருவர் முட்டை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதுவரை பலரும் முயற்சி செய்து இந்தப் போட்டியில் இதுவரை யாரும் நிற்க முடியாமல் போனது. அதிகபட்சம் 2 முட்டைகளை ஒன்றாக நிற்க வைப்பதே மிக கடினமாக இருக்கும்.
மேலும் இந்த 5நிமிடத்தில் செய்து முடிக்க வேண்டும், 5 வினாடிகள் நிலை நிறுத்த வேண்டும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்து இருந்தது. இந்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார் முகமது மெக்பெல்.
இந்த சாதனை குறித்து கூறிய அவர்: பொறுமை, பயிற்சி மற்றும் ஒருமுகத்தன்மை ஆகியவை இருந்தால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளார்.