தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5778 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் அனைத்து தமிழரையும் அழைத்து வர தீர்க்கமாக உள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,881 பேருக்கு கொரோனா உறுதி.
ஆகஸ்ட் 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து : விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு.
ஆக.3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் – சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மட்டுமே சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என தகவல்.
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் முதலமைச்சர் உத்தரவின் பேரில் பயன்படுத்தப்பட உள்ளது : அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
12ம் வகுப்பு படித்துக்கொண்டே 11-ம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் : அமைச்சர் செங்கோட்டையன்.
கொரோனாவுக்கு மருந்தாக17 மூலிகைகள் அடங்கிய இந்துகாந்த கசாயம் , 27 மூலிகை அடங்கிய அகஸ்திய ரசாயனம் பயன்படுத்தலாம் –
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருள் அடங்கிய கூஷ்மாண்ட ரசாயனத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனாவால் பலி.
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 10ம் தேதி விசாரணை : இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட 35 பொறியாளர்களுக்கு கொரோனா.
கொரோனா பரவலையடுத்து தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக்
கடைகள் செயல்படாது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை பிரிவில் மருந்து கிடைக்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.
12 ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது – அமைச்சர் செங்கோட்டையன்.
கள்ளக்குறிச்சியில் பக்ரீத் பண்டிகையின் போது கூட்டாக தொழுகை நடத்த தடை – மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக்.
நீதிமன்ற உத்தரவை மீறி முழு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரி மீது கடும் நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
காஷ்மீரில் பணியின்போது துப்பாக்கி குண்டு வெடித்து திருவாரூரைச் சேர்ந்த எஸ்.திருமூர்த்தி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மும்மொழிக் கொள்கை மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது – அமைச்சர் காமராஜ்.
மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை சூட்ட வேண்டும்.பாரிமுனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும் – பாஜக மாநில பொதுச்செயலாளர் கேடி.ராகவன்.
இயக்குனரும் , நடிகருமான வேலு பிரபாகரனை ஆகஸ்ட்14 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
வறுமையிலும் மாநில சைக்கிள் பந்தயத்தில் சாதித்த மாணவன் ரியாசுக்கு பக்ரீத் பரிசாக சைக்கிள் வழங்கிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இசைக்கருவிகள், இசைக் குறிப்புகள் திருடு போனதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார்.
ஆவின் நிறுவனத்தின் ரூ.69 லட்சம் மோசடி என புகார் – சங்க செயலாளர் வங்கி கணக்கை முடக்க உத்தரவு.
சென்னையில் மேலும் 1,013 பேருக்கு கொரோனா பாதிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா.
விருதுநகர் மாவட்டத்தில் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று.
தமிழக முதலமைச்சர் சார்பில் சீமான் மீது அவதூறு வழக்கு – ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மகாராஷ்டிர காவல்துறையை சேர்ந்த மேலும் 121 காவலர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று.
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவிற்கு சேலத்திலிருந்து வெள்ளி செங்கல் அனுப்பி வைப்பு.
ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக நடிகை தமன்னா, விராட் கோலியைக் கைது செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது வாங்கிய பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்ட மீனவர்கள், பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை : முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு.
லடாக்கில் ஒப்புக் கொண்டபடி சீனப் படைகள் இன்னும் முழுமையாகப் பின்வாங்கவில்லை – இந்தியா.