மஹாளய அமாவாசை

0
100

#மஹாளய_அமாவாசை

(17-09-2020)

மகாளய அமாவாசை… முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம்..!!

🌚ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை திதியின்போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.

🌚பொதுவாக, பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம் அமாவாசை. முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🌚அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசிப்பெற்று, நமது பாவங்கள் அனைத்தும் விலகும்.

🌚அதிலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பு பெற்ற தினங்களாகும்.

🌚இவற்றில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மட்டும் ‘மகாளய அமாவாசை” என்று அழைக்கப்படுகிறது.

🌚மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவறவிட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், இது அதற்கான முழுப்பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வருவதாக ஐதீகம்.

🌚மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

🌚இந்த மகாளய அமாவாசையில் பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்கள். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது. தோஷங்கள் இருந்தாலும் அகலும். முக்கியமாக இந்த மகாளய அமாவாசையில் தானம் செய்வது சிறப்பான பலன்களை தரும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

🌚அன்னம் – வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

🌚தேன் – புத்திர பாக்கியம் உண்டாகும்

🌚தீபம் – கண்பார்வை தெளிவடையும்

🌚அரிசி – நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும்

🌚நெய் – தீராத நோய்களை போக்கும்

🌚பால் – துன்பங்கள் நீங்கும்

🌚பழங்கள் – புத்தியும், சித்தியும் உண்டாகும்

🌚தேங்காய் – நினைத்த காரியம் ஈடேறும்

🌚நெல்லிக்கனி – ஞானம் உண்டாகும்

🌚பூமி தானம் – ஸ்வர தரிசனம் உண்டாகும்

🌚அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.

தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :

🌚உடல் மற்றும் மனம் சம்மந்தமான வியாதிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.

🌚மனதில் அமைதியை கொண்டு வரும்.

🌚பித்ரு தோஷம் விலகும்.

மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த பொதுவான சந்தேகங்களையும், அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

முன்னோர்களை வழிபட என்னென்ன முறைகள் உள்ளன?
அவர்கள் இறந்த திதி, வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை சொல்லிச் செய்ய வேண்டும்.

தாய் வழி
தாயாரின் தகப்பனார் – தாயார்
தாயாரின் தாத்தா – பாட்டி
தாயாருடைய தகப்பனாரின் தாத்தா – பாட்டி

தந்தை வழி
தகப்பனாரின் தகப்பனார் – தாயார்
தகப்பனாரின் தாத்தா – பாட்டி
தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா – பாட்டி

மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

பெண்கள் செய்யலாமா?
தங்களுடன் சகோதரர்கள் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம்.

இதை ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?
எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாயிருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?
வீட்டில் செய்வது நல்லது.

தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா?
அவசியம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்கும் பக்ஷத்தில் தாங்களே செய்து கொள்ளலாம். எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

தர்ப்பணம் செய்யும் முறைகளைச் சொல்லுங்களேன்?

முதலில் அவரவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள். அந்தத் திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம் கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.

தர்ப்பணம் அன்று விரதம்

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

தர்ப்பணம் செய்யும் முறைகள்

முதலில் யாருக்கு திதியோ அவருக்குத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி உள்ளவர்களுக்கு, பின் தாய் வழியில் உள்ளவர்களுக்குச் செய்யலாம்.

நாமே எப்படி செய்வது?

முதலில் பிள்ளையார் துதி (சுக்லாம் பரதரம்).

பிறகு….

#பித்ரு_தர்ப்பண_மந்திரம்

மெய்யில் விளங்கும் ஜோதி

மெய்யுணர்ந்த மேல் நீத்தார்

மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று

மனங்குளிர்வீர்

மனங்குளிர்வீர்

மனங்குளிர்வீரே…

எனும் மந்திரத்தை கூறி எள் நீர் கொடுக்கவும்.

(எதுவுமே இயலாத நிலையில் பசுவிற்கு அகத்தி கீரையோ அல்லது அருகம்புல்லோ கொடுத்தாலும் போதும்)

என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்?

ஒரு வருடத்தில் தாய் தந்தையர் இறந்த திதிகளை தவிர, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், ஒவ்வொரு கிரஹணத்தன்றும், சூரிய சந்திர கிரஹண காலங்களில், ஒவ்வொரு மாத அமாவாசையின் போதும் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here