மலர் மங்கையவள்

0
13

 

மலரேந்தும் மங்கையிவள்
மயக்கிடும் விழிதனில்
மயங்கி வீழ்ந்தே கிடந்திடவே
மனமது ஏங்கி தவிக்குதடி…

பாவையிவள் நெஞ்சமதில்
மஞ்சம் தேடும் மலர்கள்
என்ன தவம் செய்ததோ
பூர்வ ஜென்மமதில் …

மலர்களை
மேலாடையென உடுத்திக் கொள்கிறாள்
மங்கையொருத்தி…
மங்கையவள் மென்மைக் கண்டு
நாணத்தில் தலை கவிழ்கின்றன
மலர்கள்..

மஞ்சமதில்
மன்னவனின் மடிதனில்
மயங்கியதை எண்ணியே
மலர்களை மார்பிலேந்துகிறாள் இவள்
விரகதாபத்தின் விரதம் தீர்ந்திடவே…

மங்கையிவள் இதழ்கள்
மெல்ல மெல்ல உலர்கின்றன
மன்னவனின் இதழ் ஈரம் வேண்டியே..
மலர்களின் இதழ்களும் உலர்கின்றது…
மங்கையவள் விரக தாபத்தின்
வெப்பம் தாளாமல்…

-சசிகலா திருமால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here