மற்றவை நேரில் மறந்துபோன வார்த்தைகள்…

0
16

அன்பென்னும் அமுத விஷமதை
அணுவணுவாய் ஊட்டியே
நொடிக்கு நொடி
இதயமதை கசக்கிப் பிழிந்தே
குருதியை கொடூரமாய் உறிஞ்சுகிறாய்…
நொடிக்கு நூறுமுறைப்
பிறக்க வைத்த உனதன்புதான்
இன்று… கோடிமுறை
இறக்கவும் வைக்கிறது..

இதயத்தின் பெரும்பகுதி
இரத்தத்தால் மட்டுமல்ல
நின் பிரிவொன்றை தாளமுடியாமல்
கண்கள் வடிக்கும்
கண்ணீரெனும் திரவத்தாலும்
நிரப்பப்பட்டிருக்கிறது…

புரிதலில்லா பிரிவொன்றில்
தனிமைப்பட்டிருந்தாலும்
நினைவுகள் என்னவோ
உன்னைச் சுற்றியே வட்டமிடுகின்றன…
நீ என்னுள் துவங்கி
என்னுள்ளேயே நிறைவடைகிறாய்…
உன்னில் நான் உதிக்கிறேனா?
என்றறியா வினாவோடு…
எது எப்படியோ…
மறந்துப்போன வார்த்தைகளைச்
சுமந்துத் திரிகிறேன் நான்..
மற்றவை நேரில்…

-சசிகலா திருமால்,
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here