மயோபதி மருத்துவ முறை

0
56

மயோபதி என்றொரு மருத்துவ முறை. வேறெங்கும் இல்லாதது. எங்கள் ஊரருகில் வீரவநல்லூரில் அமைந்துள்ளது. மேனாள் நடுவண் அமைச்சரும் திரைப்பட நடிகருமான திரு. நெப்போலியன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இன்று அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரான எனது நண்பர் வேங்கை சந்திரசேகர் என்னை அங்கே அழைத்துச் சென்றார். எந்தவொரு பந்தாவும் இல்லாமல் இயல்பாக வரவேற்று உரையாடிய அவர், தன்னுடைய மகன் இந்த சிகிச்சை முறையால் குணம் பெற்றதைக் கண்டு மகிழ்ந்து பலருக்கும் இந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அடர்ந்த மரங்களும் புல்வெளிகளும் நிறைந்த இயற்கைச் சூழலில் இந்த மயோபதி காப்பகத்தைத் தொடங்கி நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இந்த சிகிச்சை முறை எங்கள் ஊரைச் சேர்ந்த பரம்பரை எலும்பு முறிவு வைத்தியர் இராமசாமி நாடார் என்பவரின் பேரன் இராமசாமி என்பவர் தலைமையில் நடத்தப்படுகிறது.

இங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தி கால்களுக்குப் பயிற்சி கொடுத்து வலுவாக்குவதும் இங்குள்ள முறைகளில் ஒன்று. பல பெற்றோர் திரு. நெப்போலியன் அவர்களிடம் வந்து நன்றி தெரிவித்ததை நேரில் கண்டேன்._

கொரானா காலத்தில் மட்டும் இரண்டு மாதங்கள் மூடப்பட்ட இந்த காப்பகம் மீண்டும் இயங்கி வருகிறது.

இன்னொரு கலைஞரையும் அங்கே சந்தித்து உரையாட நேர்ந்தது. அவர்…

மா. பாரதிமுத்துநாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here