மனுநீதி

0
18

பசுவின் கண்ணீருக்காய்
தன் மகனை தேர்க்காலில்! இ
ட்டுக்கொன்று தமிழ்வளர்த்த நாடு இது!

நீதி அதிகாரியின் கண்ணை
மறைத்து!!
(அ)நீதியாய் வந்தபணம்!! கதவைதட்டுகிறது!!
மரமாய் இருக்க ஆசையில்லை இப்போது!!
மரத்துப்போன கிளையாய் இருக்க ஆசை இப்போது!!

இந்தியாவை நினைக்க இதயம் பதறுகிறது!!
(ஊர்) இதயம் கெட்டகேட்டைப் பார்த்து நீதி பதுங்குகிறது!!
சிலர் வெள்ளை உள்ளமென உருவங்கள் ஓடிஅலையுது!!
பலர் உள்ளத்தில் நெஞ்சமெல்லாம் நஞ்சாய்விளையுது!!

நாடுமுன்னேற பலர் நற்தொண்டு
செய்யவதுண்டு!!
நல்லதை கெடுக்க பலர் நாச வேலை செய்வதுண்டு!!
கிளைகளில் அமர்ந்த கிளிகள்கணக்கு கேட்பதுண்டு!!
கில்லாடி வேலையின் பதில்வராதது போலத்தானே! நாட்டுத்தலமை போவதுண்டு!

அடிமர ஆணிவேர்கணக்கும்
தாய்நாட்டுக்கு அபதூராய்இருக்கும்!!
அதிகம் கொடுப்பவனை ஆதரிக்காதே!!
அதிகம் கொடுக்காதவனை நீவெறுக்காதே!!

தழைகொடுத்து! தலையை வளர்ந்து வெட்டும் !!
ஆடாகிதவிக்காதே!!

தமிழ் வளர்த்த பாண்டியனின் கட்டளை இல்லை !! இது
என்மக்களுக்கான பணிவான வேண்டுகோள்!
நீதியின் சங்கேமுழங்கு!!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ் நாடு!
என்பெயரைமாற்றும்
கோமாளிகளை நம்பாதே!!
ஏமாளியாய்வாழாதே!!
 -கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here