மனிதனின் ஒரு கூட்டம்

0
48

மனிதனின் ஒரு கூட்டம்..

ஏதோ ஒரு எண்ணத்தில் ஓய்வில்லாமல் சுழல்கின்றது…

ஒரு கூட்டம் ஓய்ந்தே கிடக்கின்றது..
வேறு ஒரு கூட்டம்
உண்மை தன்மையை அறியாமல் சமூக ஊடகங்களில் மூழ்கி கரைசேர முடியாமல் ஒரே பக்கமாய் சாய்ந்தே விடுகிறது..

மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்..

அன்பே சிவம்..
தற்போது அனைத்து உயிர்களையும் அரவணைக்க கற்றுக்கொடுப்பதை விட வெறுக்க கற்பிக்கபடுவதே உச்சத்தில் இருக்கிறது…

ஓராண்டுகள் கடந்தும் தொடர்கின்றதே சோகம்.. கொரோனா காவு வாங்கிய உயிர்கள் எத்தனை எத்தனையோ..

மழை பேசியதாம்..

எனது அருமை தெரியாமல் அமிர்தமாக நான் கொடுக்கும் நீரை (H2O) அசுத்தம் என நினைத்து சேகரிக்காமல் விட்டு விடுகிறான் மனிதன். ஏனெனில் அவன் அறிவில் கூடியவனாம்..

என்னையே எண்ணி காலம் கழிக்கிறாயே.. ஏய் மரமே..

பார்.. பாரில் ஆக்சிஜன் குறைந்து விட்டதாம்..
உன் உச்சி முகர்ந்து உனது பாதம் தழுவிய எனது நீரை மேற்கொண்டு சென்று உனது அங்கங்கள் குளிர மறுபடியும் இளமையுடன் சூரியனிடம் சேர்க்கை கொண்டு.. மனிதனுக்காக நஞ்சை விலக்கி உன் நறுமணத்தை ஊதிவிடு.. அது அவனின் நாசிக்குழாயில் நன்றாக ஊடுருவும் வகையில் இருமடங்காக (O2) பிரித்து கொடு பாவம் மனிதன்..

மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்.. இது மனிதன் மறந்த பழைய செய்தியாயிற்று.

மரம் தவித்தது..
மழை பொழிந்தது!

மழை பொழிந்தது..
மரம் துளிர்த்தது!

மரம் துளிர்த்தது..
மனம் குளிர்ந்தது!

கணேஷ் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here