மகிழ்ச்சி FM ன் “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்வு.

0
284

மகிழ்ச்சி FM மற்றும் மதியழகி மீடியா நெட்ஒர்க், சமூக ஊடகங்களும் இணைந்து,பொது மக்களிடம் நேரடியாக களத்திலும், மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பல்வேறு குழுவினர்கள் மூலமாகவும், தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் சிறந்த முறையில் மக்களுக்காக பணியாற்றிய சிறந்த ஆளுமைகள் யார் ? என்ற வாக்கெடுப்பில் தமிழகத்திலுள்ள முன்னணி அரசியல் தலைவர்களின் பெயர்களை முன்னிறுத்தி, எடுக்கப்பட்ட கருத்துக்களின் படி மக்களிடையே மிக அதிக வரவேற்பை பெற்று, 2020 ஆம் ஆண்டின் தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு,தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும்,திராவிட முன்னேற்ற கழக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

என்பதை மகிழ்வோடு தெரியப்படுத்திக்கொள்கிறோம். தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..! இந்த விருதினை விரைவில் மதியழகி மீடியா நெட்ஒர்க் நிறுவனத்தினர், மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்க இருக்கின்றனர்.இந்த மாபெரும் வாக்கெடுப்பில் பங்கேற்ற பொது மக்களுக்கும்,சமூக வலைத்தளங்களில் வாக்கு பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கும்,இந்த மாபெரும் வாக்கெடுப்பை சீரும்சிறப்புமாக செயல்படுத்திய மதியழகி மீடியா களப்பணி குழுவினர்களுக்கும்,பல்வேறு நகரங்களில் இருந்து ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களுக்கும்,ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ..!
                                                       இப்படிக்கு ,
                                            மகிழ்ச்சி FM  & மதியழகி மீடியா நெட்ஒர்க்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here