மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

0
160

குறைந்த பட்ஜெட்டில் படத்தைக் கொடுத்து பலரை வாழ வைத்தவர்; மனிதாபிமானி; மகனைக் கண் மருத்துவராக்கி, பலருக்கும் தொண்டாகச் செய்ய வேண்டும் என்று மகனைக் கேட்டுக் கொண்டார்; மகனும் இன்று வரை அதைச் செய்து வருகிறார்.

தனது காலம் முடியும் முன்பு நெருங்கிய ஒரு நண்பரிடம்,
”பெயர் நிற்கிற மாதிரி நான் எந்தப் படமும் பண்ணி சாதிக்க வில்லை ‘
என்று வருந்தியிருக்கிறார்! அதைப் படிக்கும் போது மனதுக்கு சங்கடமாக உணர்ந்தேன்.

‘ என்ன சம்பாதித்தாலும் கொஞ்சம் கூட விளம்பரம் பண்ணிக் கொள்ளாமல் நிறைய தானதர்மங்கள் பண்ணியவன் ஜெய்சங்கர். ‘மெர்ஸி ஹோம்’ ஒன்றுக்கு அவன் பண்ணியிருக்கிற உதவிகளை ‘கைங்கர்யம்’ என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்குத் தாராளமாகப் பண்ணியிருக்கிறான்.’

ஜெய்சங்கரின் நண்பரான சோ சொன்னது (ஒசாம அசா).

திரு. அம்ரா பாண்டியன் தனது செய்தியில் இவர் பணத்தைச் செலவு செய்து உணவு வழங்கும் நிகழ்வில் பிரபலங்கள் யாரையாவது அழைத்து வந்து அவர்களைப் பரிமாறச் சொல்வார் என்று குறிப்பிட்டிருந்தார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நீங்களே பரிமாறலாமே” என்று ஜெய்சங்கரைக் கேட்டதற்கு, அவர், நான் அழைத்து வருகிறவர்கள் இதையெல்லாம் பார்த்திருக்கவே மாட்டார்கள். இங்கு வந்த பிறகு அவர்களுக்கும் இதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்” என்றாராம்!

இப்போதும் லாஜிக் இல்லாத அவருடைய சில பழைய கருப்பு வெள்ளை படங்களைப் பார்க்கும் போது மனம் ரிலாக்ஸாக உணர்கிறேன்.

‘காலம் ஒரு சல்லடை

உலகம் அதன் கண்கள்

பலர் தம் வாழ்வை அதனூடேச்

செலுத்தும் போது

உலகின் கண்கள் அகன்று

புறந்தள்ளி விடுகிறது

சிலரதன் வாய்ப்படும்போது

சல்லடையின் கண்கள்

நெருங்கிப் பிடித்துக் கொள்கிறது!

காலம் இதற்கு பொறுப்பாகாது

ஆனாலும் காலத்துடன்

சிலர் நிற்கின்றனர்

‘உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே!’

என்ற புறப்பாட்டின் வரிகளே

நினைவுக்கு வருகின்றன!

காலத்துக்கு எந்தக் கடமையும் இல்லை

ஆனால் உலகத்துக்கு உண்டு!

ஏனெனில்–

”உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே”

   -மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here