மகிழ்ச்சி பா.ரஞ்சித் சார்!

0
26

இளமைக்காலத்தில் கலைஞரின் படம் வெளிவந்தாலும், தி.மு.கழகத்தில் இருக்கிறார் என்பதற்காக டி.ராஜேந்தர் படம் வெளிவந்தாலும் முதல்நாள் முதல் காட்சியாக பார்த்துவிட வேண்டும் என ஆர்வம்  கொள்வதுண்டு…

அதற்கு அடுத்த காலகட்டத்தில் யாராவது ஆர்வத்தை தூண்டினால் ஒரு பத்து நாளில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். இப்போதெல்லாம் யார் என்ன சொன்னாலும் சரி தொலைக்காட்சியில் வரட்டும் பார்ப்போம் எனும் மனநிலைதான்!…

இந்த நிலையில்
ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சார்பட்டா…

மிசா காலகட்டத்தை நினைவு படுத்தும் விதமாக தி.மு.கழகத்தைப் பற்றி நேர்மறை கருத்துக்கள் கொண்டு வந்திருப்பதாக, அதுவும் படத்தில் ஒரு முக்கிய பாத்திரமான பசுபதி தி.மு.கழக நிர்வாகியாக வருவதாகச் சொன்னதால் மனதில் ஆர்வம்…

நேற்று இரவு அமேசான் பிரைமில் ஒரே மூச்சில் அமர்ந்து பார்த்தாகிவிட்டது.

யாரும் பொறாமைப்படும் அளவுக்கு கழகத்தை தூக்கி நிறுத்தவில்லை அப்படியொன்றும். பாத்திரத்தின் இயல்பு மாறாமல் ஒரு சில இடங்களில் மிசா குறித்த வசனங்கள்…
வாத்தியார் ரங்கனின் தோளில் எப்போதும் கருப்பு சிவப்பு துண்டு… அதற்கும் தைரியமும் நல்ல மனசும் வேண்டும்!…
மகிழ்ச்சி ரஞ்சித் சார்!

மற்றபடி ஒரு அருமையான வீர விளையாட்டைப் பார்க்க தூண்டும் படம். எந்த விளையாட்டு பற்றியென்றாலும் அதை நுணுக்கமான பார்வைகளுடன் வேகமான காட்சி அமைப்புகளால் கண் முன் கொணர்ந்து நிறுத்தும்போது இருக்கையின் நுனிக்கு வந்து விடுவது இயல்பு. ரஞ்சித்தின் சார்பட்டா படம் அந்த வகையிலான, கண் திருப்ப வழியில்லாத, ஒரு விறுவிறுப்பான படம் என்பதில் சந்தேகமில்லை. ஆர்யாவின் பல்வேறு கட்ட உடல் அமைப்புகள் அவருக்கு தொழில் மீது இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. வேறு நடிகர் யாரையும் பொருத்திப் பார்க்க இயலாத அளவிற்கு அருமை அவரது நடிப்பு.

அப்புறம் கடைசியா ஒரு வரி…

“அந்த மாரியம்மாள் மிகவும் ரசிக்க வைத்தாங்க!”

-பாப்பாக்குடி இரா.செல்வமணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here