மகிழ்ச்சி உருவமில்லா !!ஒன்று!
மகிழ்ச்சி,உயரிய விலையில் கிடைக்கா ஒன்று!
மகிழ்ச்சி பிறருக்கு ஈகைஅறம்செய்ய வருவது!!
மகிழ்ச்சி வேரின்றி இதயநிலத்தில் விளைவது!!
மகிழ்ச்சி எல்லோர் க்கும் பொதுவானது!!
மகிழ்ச்சி ஏழைபணக்கர தரமறியாது!!
மகிழ்ச்சிக்குபாசை இல்லை!!
மகிழ்ச்சி காணாதோர்வாழ்வு வாழ்வுமில்லை!!
குழந்தையின் மகிழ்ச்சி குறும்பிலே!
குமரியின் மகிழ்ச்சி திருமணத்திலே!!
தம்பதிகளின் மகிழ்ச்சி! தாய்மையிலே!!
தாய்க்கு மகிழ்ச்சி பிள்ளைகள் வளர்ப்பிலே!
தந்தைக்கு மகிழ்ச்சி தன் பேரண்கள் வளர்பிலே!!
தரணிக்கு மகிழ்ச்சி!
வான் பொழிவிலே!!
குடிமக்களுக்கு மகிழ்ச்சி !குழப்பமில்லா !அரசு அமைவிலே!!
அரசுக்குமகிழ்ச்சி
அனைவரையும் சமாதான சாதிமத பேதமற்ற மகிழ்விலே!!
சாமானியனின் மகிழ்ச்சி அன்றாட உணவிலே!!
மாளிகையில் கிடைக்கா சந்தோஷம்!
மனதால் குடிசையில் கிடைப்பதே ! மகிழ்ச்சி!!
-கவிதை மாணிக்கம்