மகிழ்ச்சி தினம்…❤

0
17

மகிழ்ச்சி தினம்…❤

எப்போதும் இன்புற்றிருக்க பொருள்களோ புகழோ பணமோ அவசியமில்லை…
மகிழ்ச்சி என்பது ஓர் உணர்வு… மகிழ்ச்சியின் மையப்பகுதி நம் உள்ளத்தில் தான் உள்ளது….
எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் எல்லாரிடமும் அன்புடனும் பரிவுடனும் பரிமாறிக்கொள்ளும் சிநேகமே மகிழ்ச்சிக்கான வித்து…
மகிழ்ச்சியின்றி எந்த உயரத்திற்கு போனாலும் அதனால் பயனில்லை….

“தொட்டனைத்தூறும் மணற்கேணி” போல நம் மனதின் முதிர்ச்சியால் தேவைப்படும் போது தம்மிடமே தோண்ட தோண்ட சுரப்பது தெரியாமல் பலர் பாலைவனச்சோலை என நினைத்து அதை தேடி தேடி நித்தமும் அலைகின்றனர்…

மகிழ்ச்சி என்பது முழுதிருப்தியுடன் செய்திடும் சிறு சிறு நிகழ்வுகளிலும்… சுயநலத்தோடு சுருங்கிவிடாமல் பிறர்நலமாக மாறும் உயர்ந்த எண்ணங்களிலும் ஆக்கபூர்வமான சிந்தனைகளிலும்…
தேவைக்கேற்ப “இது போதும்” என்ற மனநிறைவோடு வாழ்பவர்களின் மனங்களிலும் எப்போதும் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும்…. தேவையற்ற கோபத்தை ஒதுக்கி வைத்தும், கவலைகளை தள்ளி வைத்தும் வாழ்பவர்கள் எப்போதும் மகிழம்பூக்களையே சுமந்து வாழ்கின்றனர் மனநிறைவாய்…..

மகிழ்ச்சியே கோவில்…
மகிழ்ச்சியே வழிபாடு…
எப்போதும் மகிழ்ந்திருப்போம்…
பிறரையும் மகிழ்வித்திருப்போம்…💞

– கவிஞர் அனிதா சந்திரசேகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here