மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான வழிகள் பற்றி கவிஞர் விஜிவெங்கட் அவர்களின் உரை.

0
109

மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான வழிகள் பற்றி ஹைதராபாத்திலிருந்து கவிஞர் விஜிவெங்கட் அவர்களின் உரை… (Viji Venkat speech on ‘Magizhchi’)

மகிழ்ச்சி Fm youtube சேனலில் பார்த்து மகிழுங்கள்…

 

கவிஞர் விஜி வெங்கட் அவர்களின் சுயவிபரம்

• தமிழ்நாட்டில் புதுகை என்று அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தேன் . சிறுவயதிலிருந்தே தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டி போன்றவைகளில் பல்வேறு பரிசுகள் வாங்கியுள்ளேன். பள்ளி இறுதி தமிழ்த் தேர்வுகளில் முதலிடம் பெற்றதற்கான சான்றிதழ் பெற்றேன்.

• 1998 ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கிய மணவாழ்க்கையில் கொல்கத்தா தமிழ்ச் சங்கம் மற்றும் South India club இணைந்து நடத்திய பட்டிமண்டபத்தில் பேசியதற்கு சிறந்த பேச்சாளர் என்று South India club தனது இதழில் வெளியிட்டு பெருமை செய்தது.

• மேலும் கொல்கத்தா தமிழ் சங்கம் , தமிழ் மன்றத்தில் கவியரங்கம், சொற்பொழிவு, பட்டிமண்டபம் போன்றவற்றில் தொடர்ந்து பேசி சிறந்த பேச்சாளர் என்று அனைவராலும் சிறப்பிக்கப்பட்டேன். கவிஞர் “திரு. மு. மேத்தா “ அவர்களின் முன்னிலையில் கவியரங்கம், மற்றும் பட்டிமண்டபத்தில் பேசி பாராட்டு பெற்றதுடன் M. Phil பட்டத்திற்கு அவரின் கவிதைகளை “கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளில் மத ஒருமைப்பாடு ஓர் ஆய்வு “ என்ற தலைப்பில் அவரின் வழிகாட்டுதலோடு ஆய்ந்து பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. கவிஞர் திரு. பொன்னடியார் முன்னிலையில் கவிதை வாசித்து பாராட்டும் பெற்றேன். அவரின் “முல்லைச்சரம் “ பத்திரிக்கையில் எனது கவிதை வெளிவந்தது.

• தமிழ் மன்றம் நடத்திய சொற்போரில் “ ஊர்மிளையைப் “ பற்றி வாதாடி வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை “ ஊர்மிளை” என்ற சிறப்பு பட்டத்தைப் பெற்றேன்.

• கொல்கத்தா பத்திரிக்கையான “டெலிகிராஃப்” பத்திரிக்கையிலும் என் பட்டிமண்டப நிகழ்வுகள் பற்றிய செய்தியும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

• சென்னைக்கு புலம் பெயர்ந்த பிறகு 20.12.2009 ம் ஆண்டு “வள்ளுவர் கோட்டத்தில்” ”கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்” முத்தமிழ்க் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களுக்கு தனது சங்கம் சார்பில் “ தமிழ்த் தலைமகன் “ விருது கொடுத்து பாராட்டு விழா எடுத்தது. அந்த ப்ருமாண்டமான நிகழ்வில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். “கவிப்பேரரசு வைரமுத்து” அவர்களின் வழிகாட்டுதலின்படி கொல்கத்தா தமிழ் சங்க பொறுப்பாளராக கலைஞருக்கான விருது விழா ஏற்பாடுகளை கவனித்ததோடு, விழாப் பேச்சாளராக “டாக்டர். அவ்வை நடராஜன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், மற்றும் அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், திரு. ஜகத்ரட்சகன், திரு. அன்பழகன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . மேலும் அந்த நிகழ்விற்காக முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றியும் “கவிப்பேரரசு வைரமுத்து” அவர்களைப் பற்றியும் கவிதையை “நகர் வலம்“ பத்திரிக்கையில் எழுதி வெளியிட்டு அவரின் வாழ்த்துக்களைப் பெற்றது சிறப்பு.

• 2014 – ல்” வின் தொலைக்காட்சியில் “தீபாவளி, பொங்கல் மற்றும் உழைப்பாளர் தின” சிறப்பு கவியரங்கிலும் மேலும் “பெண் பேசும் வார்த்தைகள் “மற்றும் விவாத நிகழ்ச்சியிலும் பங்குபெற்றேன். 2015 -ல் “பொதிகைத் தொலைக்காட்சியின் “கருத்துக்கும் களம் “நிகழ்ச்சியில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.

• இதைத் தொடர்ந்து “ மனித உரிமைக் கழகம்” , வியாபாரிகள் சங்கம் நடத்திய ப்ருமாண்டமான நிகழ்வுகளில் தொகுப்பாளினியாக பேசி அனைவரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

• 2017 – ஆம் ஆண்டு ஹைதராபாத் இரட்டை மாநகருக்கு புலம் பெயர்ந்தோம்.

• 2018 – ஆம் ஆண்டு ஹைதராபாத் “நிறை இலக்கிய வட்டம் “கம்பர் விழா” கவியரங்கில் கம்பரைப் பற்றிய கவிதை வாசித்து அனைவரின் அன்பையும் பாராட்டுதல்களையும் பெற்றேன்.
• மேலும் “ உரத்த சிந்தனை “ மற்றும் “ நிறை” பத்திரிக்கை இணைந்து நடத்திய “ பாரதி “ விழா நிகழ்வில் மக்கள் இயக்குனர் “ திரு. விசு” மற்றும் “ கலைமாமணி “ திரு. “டெல்லி கணேஷ் “அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் வாதம் செய்து மிக அருமையென இருவராலும் பாராட்டப் பட்டேன். 2019 ஆம் ஆண்டு நிறை மற்றும் உரத்த சிந்தனை இணைந்து நடத்திய ஆண்டு விழாவில், இல.கணேசன் மற்றும் ஆடிட்டர். ஜெ. பாலசுப்பிரமணியம் அவர்களிடமும் சிறந்த பேச்சாளர் என்ற பாராட்டைப் பெற்றேன்.

• “முக நூல் “குழுக்கள் நடத்திய கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ்களும் பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

• “ஹைதராபாத் தமிழர்களின் குழு “என்ற குழுவைத் தொடங்கி பல பண்டிகைகள் மற்றும் விழாக்களை 80 க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவோடு இணைந்து கொண்டாடுகின்றோம்.

• 2019 – ஆம் ஆண்டு ஹைதராபாத் இரட்டை மாநகரின் “திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் “நடத்திய 11 – ம் ஆண்டு விழாவில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டும் பெற்றேன்.

• 2020 -ம் ஆண்டிற்கான சிறந்த பெண் கவிஞர்கள் விருதை “மனித நேய -. இலக்கியச் செம்மல் விழாவில்” “முனைவர் சுந்தரமுருகனின்” இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிஞர்கள் விழாவில்” அளித்து. கௌவித்தது சிறப்பு.

• “நிறை இலக்கிய வட்டம்” நிறை முத்து என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

• இனிய உதயம் , வளரி , இலக்கியச் சாரல் , நிறை , உரத்த சிந்தனை, கவி ஓவியா , கல்வெட்டு, நீல நிலா, தமிழ் நெஞ்சம், புது வரவு, நகர்வலம், முல்லைச்சரம் ஆகிய பத்திரிகைகளில் எனது கவிதை வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
• தற்போது ‘Zoom’ இணையவழி பட்டிமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் விஜி வெங்கட் அவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க மகிழ்ச்சி வானொலி குழுமத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்…!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here