மகளிர் தின சிறப்புக் கவிதை…! மகளிரால் தலைநிமிரலாம்..!

0
66

ஆணென்ன பெண்ணென்ன இருவருமே சமநிலைதான்!
ஆணில்லா பெண்கள் தலையில்லா நாணயம்!
பெண்ணில்லா ஆண்கள் வளமில்லாத
உலர்நிலம்!
ஆணும் பெண்ணும் இரண்டறக்
கலக்கலாம்!
அன்போடு நடந்தால் என்றும்வளமோடு வாழலாம்!
மகள் வந்து பிறந்தால் மனம்போல
வாழலாம்!
மக்களைப் பெற்ற மகராசி பெயர் வாங்கலாம்!
மகளைப் பெற்ற முகராசி வயிறு
நிறையலாம்!
மகளிர் உலகம் மகிழ்வில் நெஞ்சம்
நிமிரலாம்!
மகளிரால் உலகம் தலைநிமிர்ந்து
திகழலாம்!
-சுத்தமல்லி உமாஹரிஹரன், திருநெல்வேலி.
  8/3/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here