மகளிர் தின கவிதை… !

0
115

மங்கையராய் பிறப்பதற்கே!! நல்மாதவம் செய்திட வேண்டுமம்மா!!

மண்ணில் வீரநடைபோடும் பூமகள்!!
பூமியையும் மிஞ்சும்
பொருமையின்சிகரம் இவள்!!

அன்பின் இருப்பிடம் இவள்!!
அகிலமெங்கும் அன்பு மனிதரை வார்தெடுக்கும் சுமைதாங்கி இவள்!!

கண்ணீரையும் நந்நீராக்குவாள்!!
கண்ணீர்‌ வடடிப்போரையும்
கலங்கவிடாது தேற்றுவாள்!!

கல்லையும் கனியவைப்பாள்!!
கருமலையையும் அன்பால் வென்று பொடியாக்குவாள்!!

கட்டுக்கடங்காத காளையும்!!
கண்விழிக்கு மயங்குவான்!!

அடுக்களை உறைந்தவர்!!
அகில மெங்கும் பல துறைகளில் சிறப்பதிங்கே!!

ஆணுக்கு நிகர் பெண்ணென்ரே!
ஆனந்தகும்மிகொட்டு!!

அவர் நெஞ்சில் ஆனந்தம் பூக்கவிட்டு!!

காத்திருப்போம் பூக்களை! கலவாடாது!
கண்ணியமாய் சூடி மகிழ்வோம்!!
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

– கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here