பூவப் போலனு சொல்லிச் சொல்லி
வாடி வதங்க வச்சாக
முள்ளுவேலி போட்டும் வச்சாக..
பூமித்தாயினு சொல்லிச் சொல்லி
மண்ணாக்கி மிதிச்சாக-எங்கள
மண்ணாவே நெனச்சாக..
பெண்விடுதல பேசுனா
பட்டப்பேரும் தந்தாக
பல கெட்டபேரும் தந்தாக..
பெண்கள் நாட்டின் கண்கள்னு
கண்ணக் குத்திக் கிழிச்சாக-எங்க
கனவ எல்லாம் அழிச்சாக..
அர்ப்பணிச்சு வாழ்ந்தாலும்
அற்பத்தனமா யோசிச்சாக-எங்கள
அடிமுட்டாளுனும் பேசுனாக..
நல்லகாலம் ஒன்னு பொறக்குமுனு-இனி
நம்பி இருக்கப் போவதில்ல
பொறும காக்கவும் போவதில்ல..
இது எங்க களம்..!
இனி எங்க காலம்…!
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
– K.P.பழனிவேல், சிவகிரி.