ரசனைக்குரியவளாக பார்த்துப் பழக்கப்பட்டவள் பெண்.ஆனால் இறுகிக்கிடக்கும் வலிகளின் மேல்பூச்சாக சிறு புன்னகையை ஒட்டவைத்து சமாளித்து வருகிறாள் என்ற பெரும் புரிதலை ஆண்களோ அல்லது சக பெண்களோ உணர்ந்து கொள்ளப்படும் போது மட்டுமே கொண்டாடப்படும் நாளாக அமைந்து விடுகிறது ஒரு பெண்ணுக்கு.
மென்மையானவள், அழகானவள் இவைகளைத் தாண்டி அறிவானவள், வலிமையானவள் என்று
தனக்குத்தானே புரியும்போதுதான் அவள் வானம் அழகாகிறது. அவள் பாதை பிறக்கிறது.
அவள் இலக்கு அவளால் அறியப்படுகிறது.
தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் வெளிச்சம் போட்டு காட்டும் பல சாதனைப் பெண்களுக்கும்,அன்றாடங்களையே சாதனையாக்கி,குடும்பப் பாரம் சுமக்கும் இன்முகத்தாளுக்கும் இந்த நாளை சமர்ப்பணமாக்கி மகிழ்கிறேன்.
இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்.
– கனகா பாலன்.