உன்னை ,முன் நிறுத்தி!! மேனியில்
உன் நிறைகுறை கழைவதில்!!
உளி கொண்டு செதுக்காத சிற்பி நான்!!
உன் ஆடைதிருத்தி! அலங்கார ஆபரணங்கள், கண் மை !!மெருகூட்டுவதில்!!
மைகொண்டுதீட்டா ஓவியரும் நான்!!
உன்னை, என் மனதில் எழும் ஒப்பனை வார்த்தை!! வர்ணிப்பில்!!
மடல் கொண்டுதீட்டா! கவிஞனாகிறேன் நான்!!
நான் படைத்த ஓவிய த்தை, சிற்பத்தை! கவிதையை!
நானே பார்த்து ரசிக்கும்
உன் ரசிகையும் நான்!
– முத்துமணிக்கம்.