இதோ மெல்ல மெல்ல நாட்கள் நகர
நாட்காட்டியில் நல்லதொரு நாள் பார்த்தே
என்னவனின் உயிர் நீரின்
ஓர் துளியில் உருவான உன்னை
எந்தன் சிறுநீரின் ஓர் துளிக்கொண்டே
பரிசோதிக்க எத்தனிக்கையில்
உலகின் கடவுளர்கள் அனைவரையும்
கைகூப்பி கலங்கி நிற்கிறேன்
இரட்டை சிவப்பு கோடுகள்
இலகுவாய் விழ வேண்டுமென்றே…
எதிர்பார்ப்பின் விளிம்பில் நானிருக்க
மெலிதாய் ஓர் கோடு நிரம்ப
மனமோ பதைப்பதைத்து வெதும்ப
அழுத்தமாய் அடுத்த கோடும் அரங்கேற
மனமோ உற்சாகத்தின்
உச்சத்தில் துள்ளிக் குதிக்க…
உணர்ச்சிப் பெருக்கெடுத்து
உறைந்து நிற்கிறேன் நான்…
கற்சிலையெனவே….
–சசிகலா திருமால்.