பேரழகு!..

0
75

செவ்வானச் சிரிப்பழகோ?
செந்தாழம் பூவழகோ?
அலையாடும் கடலழகோ?
வலைவீசும் கண்ணழகோ?
நகர்கின்ற நிலவழகோ?
நட்சத்திர ஒளியழகோ?
துளிர்க்கின்ற பனியழகோ?
மிளிர்கின்ற பொன்னழகோ?
என்றென்னைக் கேட்டால்
எந்நாளும் எனையாளும்
என்தமிழே பேரழகென்பேன்!

-தமிழன்புடன்…
பாப்பாக்குடி இரா.செல்வமணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here