ஆசையாசையாய்
தேடிய பொருள்
விலையில்லாமல்
கையில் கிடைத்தால்
மகிழ்ச்சி..!
நீண்ட நாள்
காத்திருந்து…
காத்திருந்து…
கிடைக்காத வேலை,
தேடாமல் கிடைத்தால்
மகிழ்ச்சி…!
சொந்த-பந்தங்கள்
வாழ்வில் எந்நாளும்
எப்போதும்
ஊடல் இல்லாமல்
கூடிவாழ்ந்தால்
இதயமெல்லாம்
மகிழ்ச்சி…!
அன்பான
இதயங்கள்
காதலாய்
இணையும்
பொழுது
மனமெல்லாம்
மகிழ்ச்சி..!
சில நேரங்களில்
இவை எல்லாம்
நாம் இழக்கும்போது
நம்பிக்கையாய்
அன்பு உறவுகள் தரும்
ஆதரவு வார்த்தைகளில்
இருக்கிறது
பெரும் மகிழ்ச்சி…!
– @உங்கள் சிநேகிதன் மகேந்திரன்.