கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கண்டியூர் அருகே விளைநிலத்தில் பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனதுறையினர் இறந்த யானையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கியால் சுடப்பட்டதில் 2 செ.மீ அளவிலான குண்டு யானையின் காதுக்கு மேல் புறத்தில் துளைத்து மூளையில் பாய்ந்து மூளை சிதறி உயிரிழந்துள்ளது, யானையின் உடலில் இருந்து அலுமினிய குண்டு எடுக்கப்பட்டது.
யானையை சுட்டுக்கொன்றதாக ராமசாமி, கிருஷ்ணசாமி ஆகிய இருவரையும் கைது செய்து, இவர்கள் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.
இவ்வாண்டில் கோவை சகர வனப்பகுதியில் இதுவரைக்கும் 14 யானைகள் இறந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.