பெண்களுக்கான சில ஆன்மீகக் குறிப்புகள்.

0
92

1) பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இடவேண்டும். மாங்கல்யம், நெற்றி, வகிடு. இது தெய்வீக பண்புகளை பெற்றுத்தரும்.

2) தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்சபூத சக்திகள் அதிகம்.

3) காலையில் அடுப்பு பற்ற வைக்கும் பொழுது அக்கினியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.

4) தாலி என்பது மங்கலப் பொருள். எனவே அணிகலன்களை போல் தினமும் அதை கழற்றி வைப்பதும், மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும், தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.

5) மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது.

6) கோவிலுக்கு கொண்டு செல்லும் எண்ணெய் கோவில் விளக்கில்தான் ஊற்றவேண்டும் தவிர, வேறு ஒருவர் ஏற்றிவைத்த விளக்கில் ஊற்ற கூடாது.

7) முந்தானையை தொங்கவிட்டு நடக்கக்கூடாது. இழுத்து சொருக வேண்டும். முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடி விடும் என்பார்கள்.

8) பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும் வலது கைக்கும் நடுவே முந்தானை துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.

9) ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here