பெண்களுக்கான அழகு குறிப்புகள்..!

0
93

சிறு அழகுப்படுத்தலுக்கும் பியூட்டி பார்லர் செல்லும் பெண்களுக்கு வீட்டில் இருந்தே தங்களை அழகுபடுத்தி கொள்ள கூடிய 10 எளிமையான அழகு குறிப்புகள்..

01. தோல் பளபளப்பாக

தேங்காய் எண்ணெய் – மஞ்சள்தூள் சேர்த்து, குழைத்து உடம்பிற்கு தடவி வேண்டும்.

பயத்தமாவை தேய்த்துக் குளிக்க வேண்டும்

தோல் பளபளப்பாக மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.

02. முகம் பளபளப்பாக

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்க்க வேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து சர்க்காரம் போட்டு கழுவ வேண்டும்.

தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகும்

03. முகம் அழகு பெற

அடிக்கடி முகத்தில் எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீக்கும்

தினமும் இவ்வாறு செய்வதால் முகம் அழகு பெறும்.

04. பருமனாக இருப்பவர்களுக்கு

வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து கொள்ளவும்

அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்

தினமும் காலை இதனை சாப்பிட்டால் எடை குறையும்.

05. விரும்பிய வடிவில் நகம் வெட்ட

எண்ணெயை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்ட வேண்டும்.

அப்படி செய்தால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் நகத்தை வெட்ட முடியும்

06. தலைமுடி பளபளப்பாக

 தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளை எடுத்து கொள்ள வேண்டும்

அதில் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.

அதனை தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

07. முகப்பரு தழும்பு மறை

புதினா சாறு இரண்டு தேக்கரண்டி,

அரை மூடி எலுமிச்சம்பழ சாறு

ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து கொள்ளவும்

அதனை முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊற விடவும்

பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும்.

இரவு படுக்கும் முன் இப்படி செய்தால் பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

08. எண்ணைப் பசை குறைய

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

வெட்டிய ஆப்பிளை முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும்.

அப்படி தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

09. முகத்தில் முடிகளை அகற்ற,

முட்டையின் வெள்ளை கரு

சர்க்கரை

சோளமாவு

அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆக்கவும்.

அப்படி ஆனதும் முகத்தில் தடவவும்.

காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுக்க வேண்டும்

முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

10. சருமம் மிருதுவாக

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

அதனை முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவவும்

அப்படி செய்தால் சருமம் மிகவும் மிருதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here