பெண்களால் மட்டுமே பூஜைகள் நிகழ்த்தப்படும் கோவையின் லிங்க பைரவி ஆலயம்.

0
27

 

பெண்களால் மட்டுமே பூஜைகள் நிகழ்த்தப்படும் கோவையின் லிங்க பைரவி ஆலயம்.

கோவையில் இருக்கும் லிங்க பைரவி கோவில் இந்தியாவின் தனித்துவமிக்க கோவில்களுள் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலின் தனித்துவம் என்பது இந்த கோவிலினுள் வழிபாட்டிற்காக ஆண்களும் பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும், இங்கே பூஜைகளை செய்ய கருவறைக்குள் அனுமதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான்.

இந்த பூஜைகள் செய்யும் பெண்களை “பைராகினி மா ” என்றும் ‘உபாஷிகா’என்றும் அழைக்கின்றனர். லிங்க பைரவி கோவில் என்பது கோவையில், வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா வளாகத்தினுள் அமைந்துள்ளது.

 

“இங்கு பெண்களால் பூஜைகள் நிகழ்த்தப்படும் இந்த கருத்துருவாக்கம் முழுவதும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கப்பட்டது.
இக்கோவிலுக்கென்று பிரத்யேக பூஜை முறை, மந்திர உச்சாடனங்கள், அபிஷேகம், ஆராதனை, அர்ப்பணம் பரிகாரம் என அனைத்துமே பிரத்யேக முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.. ”

ஆமாவசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் இங்கே பைரவி ஈஷா வளாகத்தில் உற்சவராக வலம் வந்து அருள் பாலிக்கிறாள்.

குழந்தைகளுக்கு நாம கரணம் – பெயர் சூட்டுதல் துவங்கி, வித்யாரம்பம் ( கல்வியை துவக்குதல்) , மொட்டை அடித்தல், திருமணம் என அனைத்து நற்காரியங்கள் லிங்க பைரவி முன்பு நடைபெறுகிறது.

இங்கே தேவியை வணங்கும் பிரத்யேக முறையை தேவி தண்டம் என அழைக்கின்றனர். பைரவியை தரிசனம் செய்து வெளியேறும் போது வேப்பிலையும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மேலும் பெண்கள் மாதவிடாய் காலத்தின் போதும் இந்த கோவிலுக்குள் வரலாம். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கோவில்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு வருவதை தடுக்க வேண்டும் என்று அறிவுருத்தப்படுகிறார்கள்

ஏன் ஒரு வீட்டின் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட வேண்டாம் என அறிவுருத்தப்படும் சூழலில் இங்கு கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதும், அவர்களே பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுவதும் அனைவரிடமும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடும் எதிர்ப்புள்ள ஒரு விஷயத்தை மிகுந்த அறிவியல் பூர்வமாக, நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகுவது ஒரு ஆன்மீக தலத்திற்கு முக்கியமான கூறு. அந்த வகையில் அனைத்து முறையிலும் தனித்து விளங்கும் தலமாக இத்திருக்கோவில் திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here