கானகத்து மயிலோ!!
கானம் பாடும் குயிலோ!!
துள்ளி யோடும் மானோ!!
துள்ளி பாயும் விழி கெண்டை மீனோ!
செவ்விதழ்களில் கோவைபழம் தாங்கி!!
செந்நிற மேனியை உருவாய் தாங்கி!!
மலையருவியென மாங்கனி மேனியென
மண்ணில் வளைந்தோடி!! நடையிலும் பெண் அருவியென!
மங்கையிவள் வலம் வர!!
மாதரசி வான்விட்டு இறங்கி வர!!
கண்டகன ஒன்று நினைவானது!!
கண்முன்னே அவள் நடந்தது!_ வர,,!!
பூரிப்பில், பூங்கவிதை ஒன்று!
பூமகளே! உனக்காய் கவிபடைத்தேன் இன்று!!!
– கவிதை மாணிக்கம்.