புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகள்..!!

0
86

புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்த செல்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முற்றிய நிலையில் இந்த செல்கள் ரத்தத்தின் வழியாகப் பரவுகின்றன. புற்றுநோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக் கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

திசு சோதனை (பையோப்சி) புற்றுநோயைப் பரப்பும்…

திசு சோதனை என்பது புற்றுநோயை திசுக்கள் மூலம் கண்டறியும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். புற்றுநோயைக் கண்டறிய பல வழி முறைகள் உள்ளன. இந்த சோதனை மிகவும் துல்லியமாக, எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் புற்றுநோயைக் கண்டறிய பயிற்சி பெற்ற மருத்துவர்களால் செய்யப் படுகிறது. இந்த முறை மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் ஒரு அனுபவமில்லாத / தவறான முறையில் இச்சோதனை செய்வதால் (அ) இடுப்புத் தொடை, நரம்புத் திசு போன்ற இடங்களில் உள்ள புற்றுக் கட்டிகளில் ஊசி போடுவதால் நோயாளிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.

புற்றுநோய்க்கு விடை இல்லை…

இது ஒரு பொதுவான கட்டுக் கதை மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன மற்றும் உடல் ரீதியாக மிகவும் சோர்வடைகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் என்பது இறப்பிற்கு சமமானது இல்லை. சரியான நேரத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டு அதற்கு உரியவாறு சிகிச்சை எடுத்தவர்கள் அனைவரும் தனது குடும்பங்களுடன் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

சிகிச்சை...

அனைத்து கட்டிகளும் ஒரே மாதிரியானது இல்லை. ஒவ்வொரு கட்டிகளும் ஒவ்வொரு மனிதருக்கும் செயல்படும் விதம் வெவ்வேறாக உள்ளது. புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் ஏற்கனவே கேள்விப்பட்ட “புற்றுநோயால் இறந்து விட்டனர்” என்ற கதையைக் கண்டு சோர்வடையாமல் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும். புற்றுநோய்க்கு தகுந்த சிகிச்சை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சரியான சிகிச்சையை சரியான வழியில் செய்வதே ஆகும்.

வலி அதிகம் இருக்கும்...

இதுவும் ஒரு பொதுவான கருத்து. நிறைய பேர் புற்றுநோய் முற்றிய பின் தான் கண்டறிகின்றனர். ஏனெனில் உடம்பில் ஏற்படும் வீக்கம் வலியில்லாததால் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். உண்மை என்னவென்றால் எல்லா புற்றுநோயும் வலியைத் தருவதல்ல. சில புற்றுநோய் கட்டிகள் ஆரம்ப கட்டத்தில் மிகவும் அமைதியாகவும் அதிக வலி இல்லாமலும் இருக்கும். எனவே மருத்துவரை அணுகாமல் விட்டு விடுவர்.

வலிக்கு காரணம்...

ஆனால், இந்த கட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்து முற்றிய நிலைக்கு வந்து விடும். பின்னர் தான் வலி அதிகம் ஏற்படும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் வாய்ப்புண். இது ஆரம்பத்தில் வலி இருக்காது. ஆனால் சிகிச்சை அளிக்காமல் விட்டால் அது பெரிதாகி அதிக வலியைக் கொடுக்கும். அது மட்டுமின்றி தழும்புகளையும் ஏற்படுத்தும். நரம்புகளில் மற்றும் எலும்புகளில் ஏற்படும் கட்டிகள் அதிக வலியை ஏற்படுத்தும்.

அப்படித்தான் புற்றுநோயும். ஆகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யாராவது அருகில் இருந்தால், அவர்களை தெம்பூட்டுங்கள். அதை செய்ய முடியாவிட்டால், வதந்திகளை பரப்பாமல் மௌனமாக இருந்தாலே அவர்கள் பாதி குணமடைந்து விடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here