புத்த பூர்ணிமா – பொன்மொழிகள்

0
28

புத்த பூர்ணிமா ஸ்பெஷல் ! 26.5.21 !

புத்த பூர்ணிமா அல்லது வைசாக் பண்டிகை மே மாதத்தின் முழுநிலவன்று பலநாடுகளில் கொண்டாடப்படுகிறது. புத்தர் லும்பினியில் பிறந்த தினம், கயாவில் ஞானம் பெற்ற தினம் மட்டுமின்றி அவர் மறைந்த தினம் இந்தப் பெளர்ணமி நாளே.

1. நீண்ட காலத்துக்கு மறைத்து வைக்க முடியாத மூன்று விஷயங்கள்: சூரியன், நிலவு மற்றும் உண்மை.

2 .ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறோம். இன்று என்ன செய்கிறோம் என்பது அதிமுக்கியமானது.

3 .அடைகிற கோபத்துக்காகத் தனியாக எவரும் தண்டிக்கப்படுவதில்லை; அந்தக் கோபமே கொடுத்து விடுகிறது தண்டனையை.

4 .மனமே எல்லாம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகின்றோம்.

5.உங்களை நீங்கள் உண்மையாகவே நேசிப்பீர்களானால், ஒருபோதும் உங்களால் மற்றவரைப் புண்படுத்த முடியாது.

6 .பொறுமையே உயர்ந்த பிரார்த்தனை.

7.உள்ளுக்குள் இருக்கிறது அமைதி. அதை வெளியில் தேடாதீர்கள்.

8 .புரிதலில் பிறக்கிறது உண்மையான அன்பு.

9 .நம்மைத் தவிர வேறு யாராலும் நம்மைப் பாதுகாக்க இயலாது. எவராலும் முடியாது, எவரும் செய்யவும் மாட்டார்கள். நாமே நமது பாதையில் நடந்தாக வேண்டும்.

10 .உங்களது ஞானஒளியை நீங்களே கண்டடையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here