புதிய வைரஸ் சீனாவின் பன்றிப் பண்ணைகளில் உருவாகியுள்ளதாக தகவல்.

0
123

கொரோனா போலவே, உலக பெருந்தொற்று நோயாக மாறும் அளவுக்கு வீரியம் கொண்ட, புதிய வைரஸ் சீனாவின் பன்றிப் பண்ணைகளில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியதால், அனைத்து நாடுகளும் கடும்பாடுபட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பன்றிகளிடம் வைரஸ்இந்த கொடுமை போதாது என்று, இப்போது, சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பன்றிகளிடமிருந்து பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

சீன மருத்துவ ஆராய்ச்சிக் குழு இந்த வைரஸ் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது

பன்றிப் பண்ணைமனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் 411 என்ற ஒரு வைரஸ் பன்றியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பன்றிப் பன்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரத்தத்தில் இந்த வைரஸ் பரவல் காணப்பட்டுள்ளது. எனவே, பன்றிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த குழு தெரிவித்துள்ளது.

பெருந்தொற்றுகொரோனா போல, உலக பெருந்தொற்று என்ற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான் என்றாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால், இந்த வைரஸ் குறித்து தற்போது பயம் தேவையில்லை என்றும் சீன நாட்டு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.வேகமாக பரவும் வைரஸ்புதிய வகை வைரஸ் மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு உடனடி அச்சுறுத்தல் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும், அது சுவாசக் குழாயில், அதாவது மூக்கு முதல் நுரையீரல் வரை, மனிதர்களிடம் மிக வேகமாக வளர்ந்து பெருக்கக்கூடும். சில சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்து மற்றொரு சுகாதார நெருக்கடி பின்தொடர வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்திருந்தனர். இந்த நிலையில்தான், புதிய வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.பன்றிக் காய்ச்சல் வைரஸ்அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, புதிய வைரஸ் 2009ம் ஆண்டு கண்டறியப்பட்ட பன்றிக் காய்ச்சல் வைரஸைப் போன்றது. அந்த வைரஸுக்கு /1109 என்று பெயரிடப்பட்டது. இது 4- 11 என பெயரிடப்பட்டுள்ளது. வைரஸ் ஒத்ததாக இருந்தாலும் ஒரே மாதிரியாக இல்லை. மேலும் இது மனிதர்களுக்கு முற்றிலும் புதிய நோய்க்கிருமியாக இருக்கும் என்பதால் மனித உடல் இதை எதிர்கொள்ள கஷ்டப்படகூடும் என்று தெரிவித்துள்ளனர் பன்றிக் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here