பாலு பாலு பாலு…

0
82

ஆயிரம் நிலவே என்று
எங்களை அடிமை படுத்தி
நீ நிலவோடு
சென்று விட்டாய்

இயற்கை யெனும்
என்று பாடிய நீ
இயற்கை எய்தி
ந் சாந்தியாகிவிட்டாய்

இளமையெனும்
பூங்காற்றாய்
எங்களை பறக்க விட்ட
பாலு
உன் மறைவு
எங்கள் பகலை
இரவாக்கி சென்று விட்டாய்

சங்கரா ஆபரணமாய்
இருந்து எங்களை மகிழ்வித்த
பாலசுப்பிரமணி
நீ உன் தகப்பன்
சிவனோடு சேர்த்து
விட்டாய்

தகிட தகட என்று ஆடி
எங்களை சலங்கை ஒலி
இல்லாமல் ஆடிவிட்டு
எஙகளை ஆடவிற்று
சென்றாயே

எஙகள் விழியில்
என்றும் மலர
நீ விழி மூடி
இந்த புவனத்தை
கேள்வி குறியாக்கிவிட்டாய்

மண்ணில் இந்த காதலாய்
இருந்து விட்டு
எஙகளை மூச்சு விடாமல்
செய்த பாலு
பெண்களை கேளடி
கண்மனி யாக்கிவிட்டாயே

நிலாவே வா
செல்லாதே வா என்று
சொல்லி
எங்களை மௌன ராகமாக்கிய
பாலு இது சரியா

மஞ்சம் வந்த தென்றலாய்
உங்கள் மன்றமாக இருந்த
எங்களுக்கு
மௌனம்தான் ராகமா

காதல் ரோஜாவே
எஙகள்.கண்ணில்
கண்ணீர் வழிகிறது
ரோஜா வாடிவிட்டதா

அஞ்சலி அஞ்சலி
உனக்கு. எங்கள் அஞ்சலி
டூயட் பாட.ஆளில்லை

.மலரும்
மௌனமாகி விட்டது
தேனாறு போன்ற
பாட்டை கொடுத்த
கர்ணனே

அந்தி மழை
பொழிகறது
உனது ராஜ பார்வையில்

என்ன சத்தம்
என்று
சத்தமில்லாமல்
தூங்கும்
புன்னகை மன்னனே

உன்னை நினைச்சேன்
பாட்டை படித்தாயே
நீ ஒரு அபூர்வ சகோதரனே

என்னை விட்டு என்னை விட்டு போகிறாயே
சிங்கார வேலனே

அரச்ச சந்தனமாய்
ஊர்கோலமாய் போகவிட்டு
குயிலை பிடிச்சு
கூண்டிலடைச்ச
சின்ன தம்பியே

பல்லேரக்காயாய்
வலம் வந்த பாட்டின்
சிவாஜியே

ஒருவன் ஒருவன்
முதலாளியா
நாஙகள் உன் தொழிலாளியாய்
திகழ்ந்த
எங்கள் முத்துவே

பாட்டை பால்காரன்
போல் காமதேனவாக
கொடுத்த
எங்கள் அண்ணாமலை யே
எங்களை ஆட்டி வைத்த
ஆட்டோகாரணாய்
ஓட்டிய பாட்சாவே

உனக்கு மரணம் என்பது
பேருக்குத்தான்
ஊருக்கு அல்ல
உன் சரணம் என்றும்
காதில் கேட்கும்

இரண்டு மொழி என்ன
மூன்று மொழி என்ன
பலமொழி பாடிய
நீ எல்லோர் மனதிலும்
இந்த தமிழ் அழியாத
வரை உனக்கு
அழிவில்லை

உன் பயணங்கள்
முடியவில்லை
உன்பாட்டு ஒரு
உதயகீதம்

நீ மாய மாய்
ஷரடியோடு சேர்ந்தாலும்
நீ என்றும்
எஙகள் உள்ளத்த்தில்
ஒலிக்கும் மார்க்கண்டனே

கம்பன் ஏமாந்தான்
என்று எங்களை ஏமாற்றிவிட்டு
நிஜத்தை நிழலாக்காதே
இலக்கணம் என்றும் மாறாது

கண்ணம்மா
கணவில்லேயா
எல்லைரயும் காதலித்த
நீ விஷ்வ துளசிதான்

மண்வாசனை இருக்கும்
வரை
அந்த மல்லிகை மொட்டை
பொத்தி வைக்க முடியாது

உனது பாட்டை கூற
ஒரு புத்தகம் போறாது
துரியோதனன்
சொல்வது போல
எதை தொடுப்பது
எதை விடுப்பது

பூஜை வேளையில்
கரடி என்பது
பழமொழி
ஒவ்வொரு நிமிடமும்
உன் அமுதகானத்தால்
கரடி போல் வந்து
எங்களை அட்டையை போல்
ஒட்ட வைத்த
பாலு நீ கரடிதானே

என் கண்ணில் இருக்கும்
துளிகள் இல்லை
அருவிபோல் நீரை
நினைக்கும்போது
கண்ணதாசனின்
பாட்டை போல
காதை படைத்து
உன் பாட்டை கொடுத்து
உன்னை எடுத்துக்கொள்ளும்
அந்த இறைவன்
கொடியவனே

பாலு உனது
சாரீரம்
உனது சரீரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here