அணையாச் சுடரை
காற்றினில் விட்டோம்
அழியாக் கவியை
ஆற்றினில் விட்டோம்
மொழியின் ஒலியை
மெளனத்தில் கரைத்தோம்
முதிரா நதியை
பாறைக்குள் புதைத்தோம்
தமிழ் சிந்தும் தேனை
தரைக்கே வார்த்தோம்
தன்னிலை மறந்தே
கண்ணீர் சொரிந்தோம்
புவியினில் இது போல்
இனி குயிலொன்று கூவுமோ?
பூக்களின் சப்தத்தை
தாள் திறந்து காட்டு மோ ?
வெண்ணிலவும் வந்து
மண் மீது உதிக்குமோ
வீணை என்பது
குரலாய்மாறுமோ
மரணம் என்பதே
சாசுவதமானதோ?
மரிக்கும் உயிர்களின்
தாயகமானதோ?
கனவு என்பதே
வாழ்வாகுமோ
மரணமும் ஜனமும்
தீராப் பயணமோ?
தங்கேஸ்