பறத்தல் நிமித்தமாய்…

0
15

கூண்டு கிளிகள்
ஆரூடம் மட்டுமா சொல்லும்
யாரோ ஓர் கவிஞனின் கவிதைக்கு
கருவாகியும் செல்லும்…
தினம் தினம்
நான் இறைக்கும் பிடி தானியம்
பட்சிகளின் பசியாற்றிட மட்டுமல்ல
என் கவிரசனையின் பசியாற்றிடவும்தான்…

மண்வாசம் நாசியில் நுழையும் போதே
விழித்துக்கொள்கிறது
என் கவிதைக் கருக்கள்…
இதோ…
திணறும் மூச்சுக்காற்றை
திசையெங்கும் எடுத்துச் செல்கிறது மழை…

அதில்… ஆங்காங்கே…
என் கற்பனையின் பறத்தல் நிமித்தமாய்
விரியும் சிறகுகளிலிருந்து உதிர்கிறது
சிற்சில கவிதைத்துளிகள்…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here