பத்மஸ்ரீ விவேக்

0
33

பத்மஸ்ரீ விவேக்

(19.11.1961 – 17.4.2001)

_அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆரம்பத்தில் வந்து நடிப்பிலும் தோற்றத்திலும் மெருகேற்றி நல்ல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் முப்பதாண்டுகள் கோலோச்சிய நடிகர் விவேக் அகவை அறுபதை எட்டும் முன்னே போய்விட்டார்._

_அவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர். ( சிவகாசி சாலையில் உள்ளது) . பெருங்கோட்டூர் அருகே ஒரு முறை சென்று கொண்டிருக்கும் போது உடன் வந்த நண்பர் ஒரு கல்லறையைக் காட்டினார். தன்னுடைய தந்தையின் உடலைத் தன் முன்னோர் வாழ்ந்த ஊரிலேயே கிறித்தவ முறைப்படி அடக்கம் செய்து பெரிய அளவில் கல்லறை கட்டியிருக்கிறார் பூர்வீகத்தை மறக்காத விவேக். தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி எனபது தவறான தகவல்._

_பொதுப் பிரச்சினைகளை விமர்சித்து மக்களைச் சிந்திக்க வைப்பதில் ஓரளவு விவேக் வெற்றி பெற்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் அந்த ‘ பாவாடை சாமியை’ மறக்க முடியுமா?_

_உள்ளத்தில் உள்ள உதறலை மறைத்துக் கொண்டு, ரவுடியாக நாலைந்து அல்லக்கைகளுடன் வரும் காமெடிக்கு வாய்விட்டுச் சிரிக்காதவர் யார்?_

_ஆனாலும் இரட்டை அர்த்த வசனங்கள், பெரியவர்களை ஏக வசனத்தில் அழைப்பது போன்றவை பலரையும் முகம் சுளிக்க வைத்தன என்பதும் உண்மைதான்._

_பட வாய்ப்புகள் குறைந்த போது தனது உண்மையான சமூக அக்கறையை வெளிக்காட்டி, வெறும் வாய்ச்சொல்லோடு நின்றுவிடாமல் தன் சொந்த சோகங்களை மறைத்துக் கொண்டு களம் இறங்கிய மனிதர் விவேக் என்றென்றும் நினைக்கப்படுவார்!_

அவருடைய ஆன்மா அமைதியுற ஆண்டவனை வேண்டுகிறேன்.

மா. பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here