பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன், நடிகை கங்கனா ரனாவத்அதிரடி முடிவு!

0
70

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனக்கு அளிக்கப்பட்ட பதம்ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். சுஷாந்த் மரணம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துகள் முக்கியக் கவனம் பெற்றன. சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களின் வல்லாதிக்கமே காரணம் என்று ஆணித்தரமாகக் கூறிவந்தார். கங்கனாவின் கருத்தை பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் கங்கனாவின் கருத்து ஆதாரப்பூர்வமற்றது எனவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கங்கனா ‘சுஷாந்தின் மரணம் குறித்து நான் கூறிய கருத்துகளை என்னால் நிரூபிக்க முடியவில்லை என்றால் எனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை நான் திருப்பி அளிப்பேன். ஏனென்றால் அதன் பிறகு நான் அந்த விருதுக்கு தகுதியற்றவனாகி விடுவேன். ஆதாரம் இல்லாமல் எந்த விஷயத்தையும் நான் பொதுவெளியில் பேசுபவள் அல்ல’ எனக் கூறியுள்ளார். கங்கனாவின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here