படைப்பு

0
12

புன்னகையும்
பொன்நகையும்
போட்டி போட்டுக் கொண்டன
மங்கை அழகின்
மகத்துவம் தாமேயென்று!
வழக்கு
விசாரணைக்கு
இறைவன் சபையில் வந்தது

புன்னகை ஈசன் படைப்பு
பொன்நகை மனிதன் படைப்பு
எந்தப்
படைப்பையும் இகழ்தல் ஆகாதே”!யென
மகாதேவன் வழங்கினன்

எதையும் ரசிக்கவும்
தயங்காமல்
பாராட்டவும்
கட்டளையிட்டார்

-சு சுசிலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here