நோயை பரப்பும் வைரஸ்களிடம் இருந்து உங்களை காத்துக்கொள்வதற்கான எளிய வழிமுறைகள்…

0
59

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’. நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்த்தும் உன்னதப் பொன்மொழி இது. ஏனென்றால், சகல வசதிகளும் செல்வங்களும் நிறைவாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது இராது.

இன்றைய நவீன வாழ்க்கையில் விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நம்மை முன்னேற்றத்துக்குக் கொண்டுசென்றுள்ளன. அதேநேரத்தில், நோய்களால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துகொண்டே வருகின்றன. இதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக காரணங்களில் ஒன்று நோய் எதிர்ப்புச் சக்தி. உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக்கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை இரண்டு வகையில் பெறுகிறோம். ஒன்று பிறவியிலேயே அமைந்த சக்தி. மற்றொன்று உணவுப் பழக்கம். ஆம்… சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க முடியும். முதல் வகையை மரபு வழியே தீர்மானிக்கும் என்பதால் இரண்டாவது வழிமுறையான ஆரோக்கியப் பழக்க வழக்கங்களால் எப்படி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது என்று பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட உதவும் வழிமுறைகள்!

தூக்கம் அவசியம்

உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும்
மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.
தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்
தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பால் உணவுகளைச் சாப்பிடுங்கள்

தயிர் உள்ளிட்ட பால் பொருள்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ‘ப்ரோபயாட்டிக்’ என்று பெயர். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

காய்கறிகள் அவசியம்

நமது அன்றாட உணவில் அவசியம் இடம்பெற வேண்டியவை காய்கறிகள். முக்கியமாக, பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடமிளகாய் போன்றவை அவசியம் வேண்டும்.
கீரைகள் சேர்த்துக்கொள்ளுங்கள்
வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிகளவில் வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

பூண்டு

ஆயுர்வேத மருத்துவத்தில், தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது. அதனால் தினசரி உணவில் பூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

மஞ்சள்

மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். ரத்தத்தைச் சுத்தகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள செலினியம் ( Selenium) தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாடு தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள ‘அலிலின்’ என்னும் வேதிப்பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

நட்ஸ்

பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகை உணவுகளில் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கு

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காளான்

உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

உங்கள் குழந்தைகளின் அரோக்கியம் அதிகரிக்க இயற்க்கை முறையில் தயாரிக்கப்பட்ட நர்மதா ஜீவ கற்பம் என்னும் அற்புத உணவு பொருட்கள் கொண்டு தயாரிக்க பட்ட சூரணம் கிடைக்கும் எல்லா வித சத்துக்கள் நிறைந்தது வெறும் ஏழு நாட்களில் உடற் பலமும் ஆரோக்கியமும் பெறலாம்

கிடைக்கும் இடம்
ஸ்ரீ தன்வந்தரி ஆயுர்வேத மருந்தகம், திருநெல்வேலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here