நேசிக்கிறேன்…

0
18

வெறுப்பதற்கு காரணமிருந்தும்
வெறுக்க முடியவில்லை உன்னை
காலங்கள் கடந்தும்
காலாவதியாகவில்லை உன் நினைவுகள்..
நிலையில்லா நீர்குமிழி அல்லவே உந்தன் நினைவுகள்
அதனுள்ளிருக்கும் காற்றென
நிலைத்திருக்கிறாய் மனதில்…

பூவை சுமக்கும் வேரென
உன் நினைவை சுமந்துத் திரிகிறேன்..
கண்கள் உலர்ந்து இதயம் நிரம்புகிறது வெறுமையில்…
உனை தேடித்திரியும் கண்களில்
அறிமுகமில்லாத முகங்கள் மட்டும்
வந்து வந்து செல்கிறது…

எது எப்படி இருந்தாலும்
உனை முழுதாய் நேசிக்கிறேன்
உன் நினைவுகளைச் சுமந்தபடி..
ஏனெனில்
முகவரியின்றி முடிந்துபோன
உறவுகளிடத்தில் தானே
முடங்கிவிடுகிறது மனது…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here